பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு டெல்லி ஜும்மா மசூதியில் சமூக இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகை நடத்தினர் .

புதுடெல்லி,

தியாக திருநாளான பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு டெல்லி ஜும்மா மசூதியில் இஸ்லாமியர்கள் தனிமனித இடைவெளியுடன் சிறப்புத்தொழுகை நடத்தினர். ஒருவொருக்கொருவர் பக்ரீத் பண்டிகை திருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.

முன்னதாக, மசூதிக்கு செல்வதற்கு முன்பாக அவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் சமூக இடைவெளி விட்டு அமர்ந்து அவர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். நாடு முழுவதிலும் இஸ்லாமியர்களால் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது

இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாள் (பக்ரீத் பண்டிகை) சிறப்புடன் இன்று கொண்டாடப்பட்டது தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் தங்களின் வீடுகளில் சமூக இடைவெளியுடன் சிறப்பு தொழுகையை நடத்தினர் மேலும் நண்பர்கள் உறவினர்களுக்கு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்,

Leave a Reply

Close Bitnami banner
Bitnami